வைக்கோல் ஏற்றி வந்த ட்ராக்டர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள்
புதுக்கோட்டை: வளதாடிபட்டி சாலையில் வைக்கோல் ஏற்றி வந்த ட்ராக்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வாகனத்தின் மீது நீரை பீய்ச்சி அடைத்து தீயை முற்றிலும் அணைத்தனர். இச்சம்பவம் குறித்து இலுப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST