கால்நடைகளை தாக்கி புலியை பிடித்த வனத்துறையினர்... - stray tiger
கர்நாடகா மாநிலம் கொடகு மாவட்டம் சித்தாபுரா பகுதியில் 5 மாடுகளை தாக்கிய புலி, மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், வனத்துறையினரின் வலையில் சிக்கியது. தொடர்ந்து சித்தாபுரத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளை புலி தாக்கி வந்தது, இதனால் அப்பகுதி மக்கள் புலியை பிடிக்க வலியுறுத்தினர். புலியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்து வனத்துறையினர் யானைகள் உதவியுடன் சித்தாபுரா அருகே மால்தாரே என்ற இடத்தில் நேற்று முன்தினம் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST