வீடியோ: விளைநிலத்தில் அட்டகாசம் செய்யும் ஒற்றை கொம்பு காட்டு யானை - viral video
தென்காசி: பழைய குற்றாலம் மலையடிவாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். அப்பகுதி விளைநிலங்களில் ஒற்றைக் கொம்பு காட்டு யானை சுற்றி திரிந்து வருவதோடு வாழை, தென்னை மரங்களை வேறொரு சாய்த்து சேதப்படுத்தி வருகிறது.
இந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானையின் அட்டகாசம் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். இதற்கிடையே அதிகாலை யானை தோப்பில் புகுந்து அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.