கோவை அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானை- பொதுமக்கள் அச்சம்! - elephants in coimbatore forest
கோயம்புத்தூர் ஆனைகட்டி சாலை கணுவாயை அடுத்த நர்சரி பகுதியில் ஒற்றை காட்டுயானை சென்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக குடியிருப்புகள் உள்ளதால் யானையை உடனடியாக விரட்ட நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST