CCTV: கிணற்றின் மீது விளையாட்டு.. தவறி விழுந்த சிறுவனின் பதைபதைக்கும் வீடியோ! - சிறுவன் கிணற்றில் விழுந்து உயிர் தப்பினார்
மத்தியப் பிரதேசம்: தமோ மாவட்டத்தில் நேற்று விளையாடிக் கொண்டிருந்த போது 7 வயது சிறுவன் 40 அடி கிணற்றில் தவறி விழுந்து, பின்னர் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். சிறுவன் அர்னவ் ஜெயின், கிணற்றின் ஓரத்தில் நடந்து செல்வதும், கிணற்றை மூடியிருந்த வலையில் நின்றபோது வலை அறுந்து கிணற்றில் அவர் விழுவது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேலும் விளையாடிக் கொண்டிருந்த அர்னவின் நண்பரான சன்யம் ஜெயின், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, உறவினர் பவன் ஜெயின், உடனடியாக கிணற்றில் இறங்கி அர்னவை மீட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST