தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் மலர்ந்த அரியவகை பிரம்ம கமலம்

ETV Bharat / videos

நாமக்கல்லில் மலர்ந்த அரியவகை பிரம்ம கமலம்; பூக்களுக்கு பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்! - பிரம்ம கமலம் பூக்களுக்கு பூஜை

By

Published : Jul 7, 2023, 1:39 PM IST

நாமக்கல்: முத்துகாபட்டியைச் சேர்ந்தவர்கள், கலையரசன். இவரது மனைவி தனப்பிரியா. கலையரசன் நாமக்கல்லில் உள்ள தனியார் நூற்பாலையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கலையரசனின் நண்பர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் பூக்கும் அரிய வகை பிரம்ம கமலம் செடியை வழங்கி உள்ளார். அதனை கலையரசன் வாங்கி தனது வீட்டில் நட்டு வைத்து கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில், சுமார் 6 அடி உயரத்திற்கு பிரம்ம கமலம் செடி வளர்ந்தது. அதன் பின் ஒரு வாரத்திற்கு பிரம்ம கமலம் செடியில் 3 மொட்டுகள் விட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவில் மூன்று மொட்டுகளும் விரிந்து பூ பூத்தது. இதனை அறிந்த கலையரசனின் குடும்பத்தினர் அரியவகை பிரம்ம கமலம் பூக்களுக்குப் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த அரிய வகை பிரம்ம கமலம் பூக்களை கலையரசனின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் பூக்களைத் தங்களது, செல்போனில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பொதுவாக பிரம்ம கமலம் செடிகள் இமயமலையில் தான் அதிகளவில் காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்தச் செடி வளர்க்கப்படுகிறது.

இது குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அதுவும் இரவில் மலர்ந்து 3 மணி நேரத்திற்குள் வாடும் தன்மை கொண்டது. அவ்வாறு மலரும்போது அந்த இடம் முழுவதும் நறுமணம் கமழும். இந்த அரிய வகை பூ நாமக்கல் அடுத்துள்ள முத்துகாபட்டியில் மலர்ந்தது அப்பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details