தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'அரோகரா' முழக்கத்துடன் அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் ஊர்வலம்! - Annamalaiyar Temple

🎬 Watch Now: Feature Video

அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருக காவடி மாட வீதியில் வலம்

By

Published : Apr 4, 2023, 2:07 PM IST

திருவண்ணாமலை:உலகப் பிரசித்திப் பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை, அண்ணாமலையார் திருக்கோவிலின் 5-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள கம்பத்திளையனார் சன்னதியில் உள்ள முருகப் பெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

கம்பத்திளையனார் சன்னதி முன்பு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 325 பேர், விரதம் இருந்து 325 புஷ்ப காவடி, பால் காவடி, பன்னீர் காவடி ஏந்தி திட்டு வாசல் வழியாக திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றி வலம் வந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.

முருகப் பக்தர்கள், முருகப் பெருமானுக்கே உரிய ’அரோகரா’ என்று பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர். திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றி வலம் வரும் போது மேள தாள வாத்தியத்துடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் காவடி ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடி வழிபட்டனர்.

இதையும் படிங்க:ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா? - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details