கோபியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து:3 பயணிகள் காயம்! - GobiChettiPalayam
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூரில் இருந்து கோபி, நம்பியூர் வழியாக கோவைக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இப்பேருந்து நம்பியூர் அருகே உள்ள மொட்டணம் என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்த நிலையில், 3 பெண் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
மேலும், இது குறித்த தகவல் நம்பியூர் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து நம்பியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த முதற்கட்ட விசாரணையில் அதிக வேகம் காரணமாக, தாறுமாறாக ஓடி தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர் என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.