ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் கார் மோதி உயிரிழப்பு... பரபரப்பான சிசிடிவி காட்சி - police dead
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் தலைமை காவலர் முருகன். இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணியில் இருந்த போது சாலையை கடக்க முயற்சித்த தருணத்தில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST