தமிழ்நாடு

tamil nadu

Monkey

ETV Bharat / videos

தாய் பாசத்தில் மனிதர்களை மிஞ்சும் குரங்கு... பூனையை வளர்க்கும் குரங்கின் வீடியோ வைரல்! - உத்தரகாண்ட்

By

Published : Jul 16, 2023, 5:30 PM IST

தெஹ்ரி :தாய் பாசத்திற்கு எல்லை என்பதே கிடையாது. அப்படி தாய் பாசம் மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றால் அது உண்மைக் கூற்றல்ல. தாய் பாசத்தில் சில நேரங்களில் மனிதர்களையே மிஞ்சும் அளவுக்கு விலங்குகளும் நடந்து கொள்ளும் என்றால் அது மிகையல்ல. அப்படி பூனை ஒன்றை தன் குட்டியாக நினைத்து குரங்கு ஒன்று தூக்கி சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

உத்தரகாண்ட் மாநிலம் தெஹரியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் பார்க் பகுதியில் பூனைக் குட்டியை தனது குட்டி போல் நினைத்து குரங்கு ஒன்று எந்நேரமும் தூக்கிக் கொண்டு சுற்றித் திரிவது காண்போரை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுலா பயணிகள் மட்டும் கிராம மக்கள் பூனையையும், குரங்கையும் காண குவிந்து வருகின்றனர்.  

பூனை நெருங்க வரும் மக்களை கண்டு அஞ்சும் குரங்கு தன் குட்டியை பாதுகாப்பது போல் அதை தூக்கிக் கொண்டு ஓடும் வீடியோ அங்கு நின்று அதை படம் பிடித்தவர்களின் செல்போன்களில் காண முடிகிறது. மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு குரங்கின் இந்த தாய் உள்ளம் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details