தமிழ்நாடு

tamil nadu

பூனைக்குட்டிக்கு பாலூட்டிய நாய்

ETV Bharat / videos

இணையத்தை கலக்கும் பூனைக் குட்டிக்கு நாய் பாலூட்டிய காணொலி! - Ghazinjur

By

Published : May 20, 2023, 2:34 PM IST

வேலூர் மாவட்டம்: காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி வரும் நாய் ஒன்று அங்கு தாய் இன்றி தவித்து வந்த ஒரு பூனை குட்டிக்கு பாலூட்டும் அதிசய நிகழ்வு நடைபெற்று உள்ளது. இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் பூனைகளை கண்டாலே சீரும் இயல்பு உள்ள நாய் மறுப்பு தெரிவிக்காமல் அந்த பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து வருகின்றது. மேலும் தன் குட்டிகளுக்கு பால் கொடுத்தால் கூட எழுந்து செல்லும் நாயானது, பூனைக்குட்டி பால் குடிக்கும் பொழுது அமைதியாக இருப்பது

மக்களை ஆச்சரியத்தில் நிகழ்த்தி உள்ளது. பகை உணர்வு முழுமையாக மாறி பூனையிடம் அன்புணர்வுடன் நாய் நடந்து கொள்வது காண்பவர் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. இந்த நிகழ்வினை காணும் மக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். தற்போது இந்த நாய், பூனைக்குட்டிக்கு பால் கொடுக்கும் நிகழ்வின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகிக் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க:சொல்லுங்க சொல்லுங்க அப்றம்.! நொறுக்குத் தீனியுடன் கவுன்சிலர்களின் குறைகளை கேட்ட நகர்மன்றத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details