நீலகிரி மாவட்டத்தில் ஊருக்குள் உலா வரும் சிறுத்தை; பொதுமக்கள் அச்சம் - சிசிடிவி காட்சி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இளித்தொரை கிராமத்தில் ஊருக்குள் உலா வந்த சிறுத்தையால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
குன்னூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகள் அடர்ந்த வனப் பகுதிகள் என்பதால் காட்டெருமை, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இளித்தொரை அண்ணியாடா கிராமத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
எனவே, வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை!
இதையும் படிங்க: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கால அவகாசம் கேட்ட சிபிசிஐடி - மீண்டும் வழக்கு தேதி ஒத்திவைப்பு