பேருந்தை வழி மறித்த யானை கூட்டம் - அச்சத்தில் பயணிகள்... - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே நேற்று (ஜூலை 05) மாலை யானைகள் சாலையில் சென்றுகொண்டிருந்தன. இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானை கூட்டத்தை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால், எரிச்சலடைந்த யானைகள் அவ்வழியாக செல்வோரை துரத்தியது. அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை யானைக் கூட்டம் தடுத்து நிறுத்தியது. ஓட்டுநர் பின்னோக்கி அரை கிமீ தூரம் வரை பேருந்தை இயக்கினார். இதனைத்தொடர்ந்து யானையில் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST