வீடியோ: பானை மேல் ஏறி பரதநாட்டிய முத்திரைகள் செய்து சாதனைபடைத்த 3ஆம் வகுப்பு மாணவி - மயிலாடுதுறை செய்திகள்
மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சியில் 3ஆம் வகுப்பு மாணவியின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
10ஆம் நாள் நிகழ்ச்சியான இன்று (பிப்.25) காவல் துறை தம்பதி ஹரிபாஸ்கர்-கார்குழலி தம்பதியின் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அஸ்மிதா, பானை மேல் ஏறி நின்று ஹீலாகூப்பை (வளையம்) இடுப்பில் 160 முறை சுற்றிக்கொண்டு பரதநாட்டியத்தின் 53 முத்திரைகளை செய்து உலக சாதனை படைத்தார்.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முன்னிலையில் மாணவியின் உலக சாதனையை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர் பதிவு செய்தனர். 2 நிமிடம் 19 விநாடிகளில் இடுப்பில் வளையத்தை சுற்றிகொண்டே பரதநாட்டிய முத்திரைகளை செய்து அசத்திய மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி விழா தொடக்கம்