தமிழ்நாடு

tamil nadu

செவலூர் மீன்பிடித் திருவிழா

By

Published : Apr 6, 2023, 6:21 PM IST

ETV Bharat / videos

செவலூர் மீன்பிடித் திருவிழா - ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா என நாட்டு வகை மீன்களை அள்ளிய மக்கள்

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே செவலூரில் மழை வேண்டியும் விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

இந்த வருட மீன்பிடித் திருவிழாவில் அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு மீன்களைப் பிடித்தனர். சாதி, மதம் பாராமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்தனர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.

தூரி என்ற‌ மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். முன்னதாக ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்திருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், ஜல்லிக்கட்டுப் போட்டி மற்றும் மீன்பிடித் திருவிழா ஆகியவை தொடர்ந்து வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details