வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து... - வேளச்சேரி காவல்துறை
சென்னை: வேளச்சேரி, புவனேஸ்வரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளம் மற்றும் மூன்று மாடிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. முதல் தளத்தில் 4 வீடுகள் என ஒவ்வொரு தளத்திலும் 4 வீடுகளை கொண்ட 12 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில், 3 வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த வேளச்சேரி தீயணைப்பு துறையினர் 5 பேர் கொண்ட குழு ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணயில் அந்த வீட்டில் குமரன் (27), என்பவர் தங்கி படித்து வருவதாகவும், வெளியில் சென்றிருந்த நேரத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட உடன் அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் ஏசி, படுக்கை, புத்தகங்கள் எரிந்து சேதமாயின. மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.