பல்லாவரம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து! - fire department
சென்னை:பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி பகுதியில் மனோலயா ஊதுபத்தி தாயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று தொழிற்சாலையில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது
இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பின்னர் கூடுதலாக கிண்டி மற்றும் மேடவாக்கம் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இச்சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.