தமிழ்நாடு

tamil nadu

விளைவித்த பொருளுக்கு விலை இல்லாததால் 5 ஏக்கர் முட்டைக் கோஸை உழவு செய்து அழித்த விவசாயி!

ETV Bharat / videos

விளைவித்த பொருளுக்கு விலை இல்லாததால் 5 ஏக்கர் முட்டைக்கோஸை உழவு செய்து அழித்த விவசாயி! - tamil news

By

Published : May 22, 2023, 3:40 PM IST

ஈரோடு:தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, 3 மாத பயிரான கோஸ், தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. 

இந்த நிலையில், சில நாள்களாக கோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் கோஸ் வியாபாரிகள் கிலோ ரூ.1-க்கு கொள்முதல் செய்ய முன்வந்தனர். ஆனால், 3 மாத பயிரான முட்டைக்கோஸ் 1 ஏக்கருக்கு நாற்று, களை எடுத்தல், உரம், மருந்து என 80 ஆயிரம் ரூபாய் வரை செலவை எட்டியுள்ளது. ஆனால், இம்முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் கோடை மழை பெய்துள்ளதால், பயிரிட்ட முட்டைக்கோஸ் நன்கு விளைந்துள்ளது.

தாளவாடி மலைப்பகுதியில் கொள்முதல் செய்யும் முட்டைக்கோஸை கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பேன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று சில்லறை விற்பனை செய்வதாகவும் விவசாயிகளிடம் கிலோ ரூ.1-க்கு கொள்முதல் செய்து, இடைத்தரகர்கள் அதனை கிலோ ரூ.25 வரை விற்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், விவசாயிகள் உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை எனக் கூறி, விளைய வைத்த முட்டைக் கோஸை அறுவடை செய்யாமல் டிராக்டர் மூலம் அழித்து வருகிறார். இதன் காரணமாக அந்த விவசாயி ரூ.4 லட்சம் வரை வருவாய் இழந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது தாளவாடியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன் காரணமாக வருவாய் இழந்துள்ளதாகவும், இதனால் உரிய நிவாரணம் மற்றும் அரசே முட்டைக்கோஸை கொள்முதல் செய்தும், நிலையான உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:கும்பக்கரை அருவிக்கு சீரான நீர்வரத்து! சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details