"சார் கைய விடுங்க சார்... பப்ளிக் எல்லாம் பார்க்குறாங்க" - போலீசாருடன் வாக்குவாதம் செய்த மதுப்பிரியர்! - குடிபோதையில் வாக்குவாதம்
திண்டுக்கல்:திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தள்ளாடி ஓட்டி வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது குடிபோதை ஆசாமி போலீசார்கள் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்று உள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த 4 போலீசார்கள் குடிபோதை ஆசாமியை மடக்கி பிடித்தனர்.
போலீசார் பிடியில் இருந்து மீண்டும் தப்பி ஓட முயன்றதால் போலீசார் அவர் சட்டையை பிடித்து இழுத்தனர். அப்போது போதையில் இருந்த அந்த நபர் "சார் கைய விடுங்க சார்... பப்ளிக் எல்லாம் பார்க்குறாங்க" என்று போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்த போலீசார் குடிபோதை ஆசாமியை அள்ளிப்போட்டு சென்றனர். போக்குவரத்து காவல்துறையினர் போலீசார் உடன் குடிபோதை ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேருந்து நிலையம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.