பக்தி பாடலுக்கு நடுரோட்டில் பரதநாட்டியம்: மதுப்பிரியரின் Viral வீடியோ! - நாமக்கல் செய்திகள்
நாமக்கல்: தமிழ்நாட்டில் மது விற்பனை ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக நடுத்தர மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மரு அருந்துபவர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பமும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மதுப்பிரியர் ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில், சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த நிலையில் மேலும் மது போதையில் மது பிரியர் செய்யும் ரகளை அப்பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குமாரபாளையத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையால் இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதனைத் தடுக்க குமாரபாளையம் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.