உத்தமபாளையம் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள் - temple festival
தேனி: உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் சிட்டு, நடு மாடு என ஐந்து பிரிவுகளாக இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி வீரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் கூடி இருந்த ஏராளமான பொது மக்கள் போட்டியில் பங்குபெற்ற வீரர்களை ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். வெகு விமரிசையாக உத்தமபாளையம் புற வழிச் சாலையில் (பைபாஸ்) இந்தப் போட்டியானது நடைபெற்றது. பந்தய தூரத்தைக் கடந்து, காளைகள் சீறிப் பாய்ந்தன. வெற்றி பெற்ற காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான தொழில்சார் போட்டிகள்! வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்!