பாஜகவில் இருப்பதால் பேரூராட்சி பூங்கா பராமரிப்பாளர் பணியில் இருந்து நீக்கம்? - மாற்றுத்திறனாளி வேதனை! - disabled person dismissed for reason of join BJP
கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்த் என்ற மாணவர், லண்டன் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் அங்கிருந்து சொந்த ஊரான கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது ஆனந்தன் என்ற மாற்றுத்திறனாளி, தான் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பூங்கா ஒன்றில் மாதம் 3000 ரூபாய்க்கு பணியாற்றி வந்ததாகவும் இன்று தங்களைக் காண வருவதால் தன்னை வேலையில் இருந்து பேரூராட்சி அதிகாரிகள் நீக்கிவிட்டதாகவும் அண்ணாமலையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆனந்தன் கூறுகையில், "முந்தைய அரசு மாற்றுத்திறனாளியான எனக்கு பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு தோட்டத்தில் வேலை தந்தது. எனக்கு சித்தப்பா மற்றும் சித்தி இருவரும் உதவி செய்து வந்தனர். நான் பாஜகவில் சேர்ந்ததற்கு பிறகு அனைத்து மீட்டிங்கிற்கும் சென்று வருவேன். அதனை மனதில் வைத்துக் கொண்டு இன்று அண்ணாமலையை பார்க்க வருவதற்கு முன்பே என்னை பணியில் இருந்து பேரூராட்சி அதிகாரி வேலைக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டார்” என்றார்.
இது குறித்து நான் அண்ணாமலையிடம் தெரிவித்தபோது அந்த 3000 ரூபாய் பணத்தை மாதாமாதம் பாஜக சார்பில் நாங்கள் உங்களுக்கு கொடுத்து விடுகிறோம் என கூறினார். பாஜகவில் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. பல்வேறு வழக்குகள் உள்ளவர்கள் எல்லாம் பேரூராட்சியில் அங்கு பணி செய்து வருகிறார்கள். ஆனால், பாஜகவில் சேர்ந்த ஒரே ஒரு காரணத்திற்காக என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"அண்ணாமலையுடன் சண்டையா? - அக்கா, தம்பி போல இருந்து கட்சியை வளர்க்கிறோம்" வானதி சீனிவாசன் கருத்து