பழனி முருகன் கோயிலுக்கு மினி பேருந்தைத் தானம் செய்த பக்தர்..! - mini bus
Published : Dec 7, 2023, 11:03 PM IST
திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று (டிச.8) திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை பழனி கோயிலுக்குத் தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோயில் முன்பு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் உதவி ஆணையர் லட்சுமியிடம் ராஜசேகர் வாகனத்தின் சாவி, வாகன உரிமப் புத்தகத்தை வழங்கினார்.
இந்த மினி பேருந்து மூலம், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், அடிவாரம் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் பகுதிகளில் ரூ.10 கட்டணத்தில் பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும், கூடுதலாக இரண்டு பேருந்துகள் கோயில் நிர்வாகம் சார்பில் வாங்கப்படும் என்றும் கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.