தமிழ்நாடு

tamil nadu

கோயம்புத்தூர்

ETV Bharat / videos

வடிவேலு போல் யோகா மேட்டுடன் மல்லுக்கட்டும் கோவை க்யூட் பேபி வீடியோ! - கோவை குழந்தையின் குறும்பு வீடியோ

By

Published : Apr 24, 2023, 1:46 PM IST

கோயம்புத்தூர்:தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை ஜாம்பவானாக விளங்குபவர் வைகைப்புயல் வடிவேலு, பாஞ்சாலங்குறிச்சி என்னும் திரைப்படத்தில் குடித்துவிட்டு தள்ளாட்டத்துடன், ஒரு ஓலை பாயில் படுக்க முயற்சி செய்து மல்லுக்கட்டுவார். ஆனால் ஓலை பாய் இருபுறமும் சுருட்டிக் கொள்ளும். 

இந்த நகைச்சுவை மக்கள் மத்தியில் மிகவும் ரசிகத்தக்கதாக இருந்தது. தற்போது பார்த்தால் கூட சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது. இதேபோல பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 3 வயதான வேத ஸ்ரீ என்கிற சிறுமி யோகா செய்வதற்காக யோகா மேட்டை விரிக்க முயற்சி மேற்கொண்ட போது வடிவேலுவின் ஓலைப் பாயை போன்று மறுபுறம் சுருட்டிக்கொண்டு வரும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ நகைச்சுவை பாணியில் வடிவேலுவை வேத ஸ்ரீ நினைவு கூறும் விதமாக உள்ளது. தற்போது இந்த குழந்தை க்யூட்டாக யோகா மேட்டுடன் மல்லுக்கட்டும் வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Thiruvalluvar University: குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் திருவள்ளூர் பல்கலைக்கழகம்.. வேலூரில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details