கலெக்டர் ஆபிஸில் குட்டி தூக்கம்போட்ட பூனை; பார்த்து சிரித்த மக்கள் - பார்த்து சிரித்த மக்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நடைபெறும். இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கரோனா வெப்ப நிலை பரிசோதனை மானிட்டர் முன்பு, அழகாக ஒரு பூனை தூங்கிக் கொண்டு இருந்தது. பழைய இலக்கியங்களில் வறுமையை குறிக்க சமையலறையில் பூனை உறங்குகிறது என குறிப்பிடுவார்கள். அதுபோல் ஆள் நடமாட்டம் இல்லாமல் செயல்படாத இடமாக காட்சியளிப்பதால், பூனை ஹாயாக படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறது என மனு கொடுக்க வந்த மக்கள் பார்த்து, சிரித்துச் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST