தமிழ்நாடு

tamil nadu

சத்தமில்லாமல் சமையலறைக்குள் நுழைந்த கரடி

ETV Bharat / videos

சத்தமில்லாமல் சமையலறைக்குள் நுழைந்த கரடி.. வைரலாகும் வீடியோ! - bear

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 1:09 PM IST


ஈரோடு:தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்தியூரை ஒட்டியுள்ள வனப்பகுதியை புலிகள் காப்பகமாக மாற்றி   சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர், தாளவாடி பகுதியை புலிகள் காப்பகமாக அறிவித்ததால், வனப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அந்தியூரை அடுத்த பர்கூர் வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக இன்னும் அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது. இந்த மலை கிராமத்தில் அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அட்டகாசம் செய்து வருவதாக வனத்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர்.

இதேபோல், பர்கூர் மலைப்பகுதி உள்ள கொங்கடை மலை கிராமத்தில் கடந்த சில தினங்களாக குடியிருப்பு பகுதிக்குள் கரடி வலம் வந்துள்ளது. இந்நிலையில், நேற்று அங்குள்ள ஒரு வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டு உள்ள சமையல் செய்யும் இடத்திற்கு வந்த கரடி, அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட முயன்றுள்ளது. இதனையடுத்து, கரடியின் சத்தம் கேட்டு கதவைத் திறந்த வீட்டின் உரிமையாளர், சத்தம் எழுப்பிய உடன் அங்கிருந்து கரடி ஓடியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details