தமிழ்நாடு

tamil nadu

திருக்குறளுக்கு ஏற்ப ஆசனங்கள் செய்து அசத்திய 9 வயது மாணவி.

ETV Bharat / videos

திருக்குறளுக்கு ஏற்ப ஆசனங்கள் செய்து அசத்திய 9 வயது மாணவி! - ஜூன் 21 உலக யோகா தினம்

By

Published : Jun 18, 2023, 9:49 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும்  கல்வி அறக்கட்டளைகள் இணைந்து நடத்தும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது. சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அருணாச்சலம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அசோக்குமார், கல்வி மையம் நிறுவனத் தலைவர் ஆம்ஸ்டிராங், வழக்கறிஞர் கருப்பசாமி, தொழிலதிபர் நடராஜன், ஆகியோர் முன்னிலையில் 9 வயது மாணவி ரவீணா 133 திருக்குறள் அதிகாரத்திற்கேற்ப 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

யோகாசனம் செய்து அசத்திய மாணவி ரவீனாவுக்கு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் சிறுமியைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார். இந்தியாவின் பாரம்பரியமான யோகாசனம், வெளிநாட்டவர்களிடையே மிகவும் பிரபலமாகியது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் யோகாசனத்தை முறையாகக் கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். யோகாசனப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கண்டு சேர்க்கும் விதமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்ததது என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details