தமிழ்நாடு

tamil nadu

கர்ப்பிணி உயிரிழப்பு காரணமாக ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat / videos

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் 9 மாத கர்ப்பிணி மற்றும் சிசு உயிரிழப்பு - ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணி இறப்பு

By

Published : Mar 5, 2023, 10:56 PM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணி பெண்டா பகுதியைச் சேர்ந்தவர், அசோக். இவரது மனைவி சரண்யா. ஒன்பது மாத கர்ப்பிணியான இவருக்கு இன்று (மார்ச்.05) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சரண்யாவின் உறவினர்கள் அவசர ஊர்திக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால், மலைக்கிராமத்திற்குள் அவசர ஊர்தி இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியான சரண்யாவும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தது. உடனடியாக ஆத்திரமடைந்த மலைக்கிராம மக்கள் தங்களது கிராமத்தில் உரிய மருத்துவ வசதி இல்லாததே கர்ப்பிணி மற்றும் வயிற்றிலேயே சிசு உயிரிழந்ததற்குக் காரணம் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக,வாணியம்பாடி - குப்பம் சாலையில் அரசுப்பேருந்தை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகள் வந்தடைந்தனர்.

பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:மகனை சித்திரவதை செய்து கை, கால்களை முறித்த கொடூர தந்தை!

ABOUT THE AUTHOR

...view details