தமிழ்நாடு

tamil nadu

தென்காசி தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி

ETV Bharat / videos

தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 7 அடி பிரம்மாண்ட குடில்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 7:47 PM IST

தென்காசி:உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகின்ற டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு கிறித்துவர்களின் வீடுகள், தேவாலயங்களில் குடில் அமைத்துப் பாடல்கள் பாடி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் சிவகிரி அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லொயோலா எல்சியத்தில் உள்ள திருச்சிலுவை ஆலயத்தில் நேற்று சிறப்பு திருப்பலி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த தேவாலயத்தில் சுமார் 7 அடி உயரமுள்ள குடில் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பிரம்மாண்டமான குடிலைக் கான வேலாயுதபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டு குடிலை வழிபட்டுச் செல்கின்றனர்.

மேலும் வருகின்ற வருடம் விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர்கள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் சிறப்புப் பரிசுகளும் புத்தாண்டு காலண்டர் வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தென்காசி தேவாலயத்தில் பிரம்மாண்டமான முறையில் குடில் அமைக்கப்பட்டுள்ளதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details