தமிழ்நாடு

tamil nadu

இயக்குநர் தங்கர் பச்சான்

ETV Bharat / videos

Karumegangal Kalaiginrana movie press meet: ரூ.500 கோடி வசூல் செய்யும் படங்களால் சமூக சீரழிவு - இயக்குநர் தங்கர் பச்சான் - tamil cinema news

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 4:10 PM IST

தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இதில் பாரதிராஜா , கௌதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், தங்கர் பச்சான்,  ஆர்வி உதயகுமார, நடிகை பாலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நல்ல படங்களில் நடிக்க நடிகர்கள் முன் வர வேண்டும். ரூ.500 கோடி வசூல் செய்யும் படங்கள் எல்லாம் சமூகத்தை சீரழிக்கக் கூடியவை. திரைப்படங்களில் வெட்டுக் குத்து என காட்டினால் வருங்கால குழந்தைகள் என்னவாக வளரும். ஜிவி பிரகாஷ் குமார் மிகப் பெரிய ஆளுமை. 

யோகி பாபு இம்மண்ணின் சிறந்த கலைஞன். அவரை வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அமெரிக்காவில் ஒரு நடிகரின் கட்அவுட்டுக்கு பால் ஊற்றிக்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கூடம் படம் வந்த போது யாரும் பார்க்கவில்லை இப்போது எல்லாம் பாராட்டுகின்றனர் கோவம் வருமா வராதா எனக்கு” என்று பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details