தமிழ்நாடு

tamil nadu

5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு

ETV Bharat / videos

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள நாகம்.. சாமி ஆடிய பெண்ணின் வைரல் வீடியோ! - Anandan

By

Published : Jun 25, 2023, 6:41 PM IST

திருப்பத்தூர்: அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். தனது வீட்டிற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்த ஆனந்தன், உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீண்ட நேர தேடுதலுக்குப் பின் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பைப் போராடிப் பிடித்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும், ஜெகதா என்பவர் பாம்பு பிடிபட்டதைத் தொடர்ந்து திடீரென பரவச நிலைக்குச் சென்று சாமி ஆடினார்.

அப்போது சாமி ஆடியபடி பேசிய ஜெகதா, "காளியம்மன் ஆன நான்தான் பாம்பு உருவில் வந்திருக்கிறேன், என்னை யாரும் அடிக்க வேண்டாம் என்னுடைய இனத்துடன் என்னை சேர்த்து விடுங்கள்" என்று கூறினார். பின்னர், தீயணைப்புத் துறையினர் பிடித்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பைத் திருப்பத்தூர் வனப்பகுதியில் விட்டனர். 

குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை பிடித்த போது பெண் ஒருவர் திடீரென சாமி ஆடியதை அப்பகுதி மக்கள் திரண்டு பார்த்துச் சென்றனர்.

இதையும் படிங்க:மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள் எவை? - ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்!

ABOUT THE AUTHOR

...view details