தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

தேனியில் உரிமம் இல்லாமல் பட்டாசு கடை.. ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அள்ளிச்சென்ற காவல்துறை! - தேனி செய்திகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 5:39 PM IST

தேனி:பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இங்கு வரும் பட்டாசுக் கடைகள் முறையான அனுமதி பெற்று இயங்கி வருகிறதா? எனத் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், பெரியகுளம் வடகரை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் யுவன் பட்டாசுக் கடை என்ற பெயரில் பட்டாசு விற்பனைகள் நடைபெற்று வந்த கடையில், காவல்துறையினர் இன்று (நவ.11) சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தீ தடுப்பு காவல் நிலையம் உள்ளிட்ட எவரிடமும் எந்த அனுமதியும் பெறாமல் பட்டாசுக் கடை நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பெரியகுளம் வடகரை காவல்துறையினர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் அனைத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், பட்டாசுக் கடைகளை அகற்ற காவல்துறையினர் முற்பட்டபோது, பட்டாசுக் கடை நடத்தி வந்தவருக்கும் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

ஆனால், காவல்துறையினர் முறையான அனுமதி பெற்று நீங்கள் பட்டாசுக் கடை நடத்தலாம். ஆனால், முறையான உரிய அனுமதி பெறாமல் நடத்துவதால் நடவடிக்கை எடுக்கிறோம் எனத் தெரிவித்தது. அதன் பின்னர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்ததோடு பட்டாசுக் கடை நடத்தி வந்த 4 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details