தமிழ்நாடு

tamil nadu

புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 2000 கன அடியாக அதிகரிப்பு!

ETV Bharat / videos

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. உபரி நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு! - தமிழ்நாடு மழை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 1:46 PM IST

திருவள்ளூர்:தமிழகத்தில் பெய்து வரும்கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து இன்று (நவ.30) உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

புழல் ஏரியின் முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில், தற்போது 3,074 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில், 20.34 அடி தண்ணீர் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஏரியில் அதிவேகமாக தண்ணீர் நிரம்பி முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில், உபரி நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details