தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

பழனியில் பயணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி - பழனி பேருந்து நிலையம்

By

Published : Apr 28, 2023, 5:16 PM IST

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தில் அழகுமலை கண்ணன் என்பவர் கோயிலுக்குச் சென்று விட்டு மதுரை செல்வதற்காக நேற்றிரவு (ஏப்.27) பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் அழகுமலை கண்ணனை மிரட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவற்றை அவர் தர மறுத்ததால், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை அழகுமலை கண்ணன் கழுத்தில் சிறிய கத்தியால், கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளனர். 

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அந்த இரண்டு பேரையும் கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து நடந்தவை குறித்து பழனி நகர காவல்நிலையத்திற்கு அளித்த தகவலின்படி, அங்கு விரைந்த போலீசார் அந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரித்ததில், இருவரும் பழனி அருகே உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்த மாசாணம், பாண்டியன் எனத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கழுத்தில் கத்தியால் அறுபட்ட காயத்துடன் அழகுமலை கண்ணன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இதனைத்தொடர்ந்து, இத்தகைய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பேருந்திற்காக காத்திருந்த பயணியை பணம் மற்றும் செல்போனைக் கேட்டு இரண்டு பேர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details