18ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் - மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள் - தரங்கம்பாடி
மயிலாடுதுறை: தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். இதில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அத்தகைய பேரழிவு நேர்ந்த தினம் இன்று. 18 ஆண்டுகள் கழிந்தும் மறையா சோகத்தில், உயிர் நீத்தவர்களுக்கு, பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்தி பலர் வழிபட்டனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST