தமிழ்நாடு

tamil nadu

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

By

Published : Mar 13, 2023, 3:47 PM IST

ETV Bharat / videos

வீடியோ: தேர்வு எழுதிய மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாடல்

சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று  (மார்ச் 13) தொடங்கியது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு நடைபெறும் போது கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தேர்வு முடிந்து வந்த மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். 

திருச்சி ஆப்ட் மார்சல் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் தேர்வினை முடித்து விட்டு வந்த மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு குறித்து கேட்டறிந்தார்.   அப்போது மாணவ மாணவிகள் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். இந்த 12ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைகிறது. 

இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். மொத்தம் 3,185 மையங்களில் தேர்வினை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறைவாசிகள் 90 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் 8 சிறைகளில் உள்ள தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

ABOUT THE AUTHOR

...view details