100 நாள் வேலை திட்ட பயனாளிகள் ஆர்ப்பாட்டம்.. ஊராட்சி மன்றத் தலைவரை அடிக்க முற்பட்டதால் பரபரப்பு! - பஞ்சாயத் தலைவரை அடிக்க முயன்ற மக்கள்
தருமபுரி:அரூர் அடுத்த தொட்டம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாச்சனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 ரூபாய் சம்பளம் வழங்குவதாக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
ஆனால், இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென அரூர் - சேலம் நான்கு வழிச்சாலையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த தொட்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.
அப்போது, திடீரென 100 நாள் வேலை செய்யும் நபர் ஒருவர் பஞ்சாயத்து தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க முற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின் சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:"விஜய்யை அரெஸ்ட் பண்ணுங்க" - டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பெண்