தாமிரபரணியின் ஒட்டுமொத்த அழகையும் ஆவணப்படமாக வெளியிட்டு அசத்திய நெல்லை கலெக்டர்! - Porunai Nellai Book Festival
நெல்லை: பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா என்ற ஐந்தாவது புத்தக கண்காட்சியில், தாமிரபரணி நதியில் அமைந்துள்ள 7 அணைகள் மற்றும் தாமிரபரணி தடங்கள் குறித்த ஆவணப் படத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டு நெல்லையின் அழகே தாமிரபரணி தான்; அந்த தாமிரபரணியின் ஒட்டுமொத்த அழகையும் ஆவணப்படமாக எடுத்து ஊரறிய செய்துள்ளதாகக் கூறினார். எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி எழுதிய 'வெஞ்சினம்' மற்றும் எழுத்தாளர் நாறும்புநாதன் எழுதிய 'வேணுவன மனிதர்கள்' என்ற நூலினை ஆட்சியர் விஷ்ணு வெளியிட பேராசிரியர் மகாதேவன் பெற்றுக்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST