'அடுத்த வாரம் தேர்வு வைப்பேன்' - அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய நாகை ஆட்சியர் - நாகப்பட்டினம் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
நாகப்பட்டினம், நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்குப் பின் ஆட்சியர் அருண் தம்புராஜ் 12ஆம் வகுப்பறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின், வேதியியல் பாடத்திலிருந்து மாணவிகளிடம் கேள்வி கேட்டார். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வகுப்பறையில் கேள்வி கேட்டால், தவறாக இருந்தாலும் முதலில் பதில் சொல்ல வேண்டும் என அறிவுரை கூறி, அடுத்த வாரம் மீண்டும் வகுப்பறைக்கு வருவேன், இதே பாடத்திலிருந்து தேர்வு வைப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST