'நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒத்துழைப்பார்' - மக்களவையில் திருமாவளவன் - திருமாவளவன் எம்பி
மக்களவையில் ‘சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை’ மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில், சிதம்பரம் எம்.பி., தொல். திருமாவளவன் பங்கேற்று பல கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும், அவர், "கன்னியாகுமரி - கேரளா செல்லும் நான்கு வழிச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா செல்லும் ஆறு வழிச்சாலை, விக்கிரவாண்டி - சோழப்புரம் செல்லும் நான்கு வழிச்சாலை ஆகிய தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலை பணிகள் கைவிடப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது’ என்றார். இதற்கு காரணம், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என ஒன்றிய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னர் கூறியுள்ளார். ’’அதை மறுத்து முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்துள்ளார். எனவே, கைவிடப்பட்ட அத்தகைய திட்டங்களை மீண்டும் தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST