CCTV காட்சி: மூதாட்டியிடம் பணம் பறிப்பு! - மூதாட்டியிடம் பணம் பறிப்பு
திருப்பத்தூர்: வாணியம்பாடி பஜார் வீதியில் சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் மூதாட்டி வசந்தா. வழக்கம்போல் நேற்று (மார்ச். 15) மூதாட்டி காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டி சுருக்குப் பையில் வைத்திருந்த 10,000 ரூபாய் பணம் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மூதாட்டி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST