Video: வீதியில் பிச்சையெடுத்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்த மநீம கட்சியினர்! - மக்கள் நீதி மய்யம்
கோவை: பெட்ரோல்-டீசல், சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசு மற்றும் சொத்துவரியை உயர்த்திய தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று (ஏப்.9) தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் முன்பு, கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்ற வசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணர்த்தும் விதமாக ஆட்டோ முன்பு பிச்சை எடுத்தும்; கேஸ் விலை உயர்வை உணர்த்தும் வகையில் ஒப்பாரி வைத்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST