Video: மயிலுக்கு முதலுதவி செய்த மயிலாடுதுறை மக்கள்; சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்! - வனத்துறை
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ள அரையாபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஒன்றின் அருகே மயில் ஒன்று சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மயிலின் மீது மோதியது. இதனால், காயம் ஏற்பட்டு சாலையில் கிடந்த மயிலினை அங்கிருந்த சிலர் மீட்டு முதலுதவி அளித்தனர். மயிலின் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தை பொதுமக்கள் மஞ்சள் வைத்துபிட்டு பின், குத்தாலம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சீர்காழி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனக்காவலர் கலைவாணன் பத்திரமாக மயிலினை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக எடுத்துச் சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST