அடி பம்பில் நீர் அடித்துக்கொடுத்து வாக்குச் சேகரித்த திருநங்கை! - மயிலாடுதுறை சிபிஎம் திருநங்கை வேட்பாளர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுகவுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3ஆவது வார்டில் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் 4ஆவது வார்டில் சினேகா என்ற திருநங்கை போட்டியிடுகிறார். காவிரி ஆற்றங்கரையில் வசிக்கும் இருளர் இன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிவரும் சினேகா பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 4ஆவது வார்டில் வாக்குச் சேகரிக்கச் சென்றபோது அங்கிருந்த அடி பம்பில் பொதுமக்களுக்கு நீர் அடித்துக்கொடுத்து வாக்குச் சேகரித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST
TAGGED:
tn urban local body election