போலீஸ் கண்முன்னே தவறாக நடக்க முயன்றவரை வெளுத்து வாங்கிய பெண்! - மதுபோதையில் தவறாக நடக்க முயன்றவரை வெளுத்து வாங்கிய பெண்
திருநெல்வேலி பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் பெண்ணிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப்பெண் அவரை கடுமையாக திட்டி பேருந்திலிருந்து கீழே இறக்கியுள்ளார். பின்னர் மேலப்பாளையம் காவல்துறையினர் முன்பு அந்தப்பெண் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். விசாரணையில் அவர் தியாகராஜ நகரைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பதும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST