விபத்துக்குள்ளான பள்ளி வாகனம்: ஊசலாட்டத்தில் மாணவர்களின் நிலை - பதைபதைக்க வைக்கும் வீடியோ - பள்ளி வாகன விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி மாவட்டத்தில் உள்ள சண்டேசரா கிராமம் அருகே, பள்ளியிலிருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த பள்ளி வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் 10 விநாடி சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், வாகனம் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. பாடலைக் கேட்டுக் கொண்டே ஓட்டுநர் ஓட்டிச் சென்றதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாகனத்தில் 21 மாணவர்கள் இருந்த நிலையில், 19 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST