பெண்களின் உத்வேகம் ரூமா தேவி! - ரூமா தேவி
திறமையும், உறுதியும் ஆகச் சிறந்த இணை. நாட்டின் முதல் குடிமகனால் அங்கீகரிக்கப்பட்ட சாதனை பெண்மணி ரூமா தேவியின் வாழ்க்கை இதனை உணர்த்துகிறது. ரூமா தேவியின் ஆரம்ப வாழ்க்கை கடும் போராட்டங்கள் நிறைந்தது. படிப்பிலும் பெரிதளவில் சோபிக்கவில்லை. ஒரு வழியாக எம்ப்ராய்டரிங் கற்று தேர்ந்தார். இன்று பல பெண்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். பார்மரிலிருந்து ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வரை சென்று வகுப்பெடுக்கிறார். இவரின் கை வண்ணத்தில் உருவான ஆடையை நவநாகரீக நட்சத்திர மகளிர்கள் அணிகின்றனர். பல்வேறு திரை நட்சத்திரங்கள், மாடல்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் ரூமா தேவி உள்ளார்.