அழகு, ஆரோக்கியம் நிறைந்த கோராபுட் மஞ்சளின் மகத்துவம்! - ஹல்தி
'மஞ்சள் இருக்க அஞ்சேல்' என்பதற்கேற்ப மஞ்சள் பல்வேறு குணங்களை நிரம்பக் கொண்ட ஒருபொருள். இந்தியாவில், உணவுப் பொருள்களில் பெரும்பாலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகின்றது. நம் நாட்டு உணவுகள் மஞ்சள் இல்லாமல் ருசிப்பதில்லை. ஆனாலும், இது சமையலுக்கு மட்டும் பயன்படும் இன்றியமையாத பொருள் அல்ல, இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலுக்கு வலுவூட்டி நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்குகின்றன. மஞ்சள் கோராபுட் மாவட்டம் லட்சுமிப்பூர் தாலுகாவில் உள்ள திமாஜ்ஹோலா கிராம மக்களின் வாழ்வாதார ஆதாரமாக மாறியுள்ளது. இங்குள்ள 100 குடும்பங்களில் பெரும்பாலான வீடுகளில் உலை கொதிக்க மஞ்சளே பிரதானம்.