வாஜ்பாய் வணங்கிய மதுரை சக்தி சின்னப் பிள்ளை! - வாஜ்பாய்
வறுமையை ஒழிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் சின்னப் பிள்ளை. மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகிலுள்ள பில்லுசேரியில் வசிக்கிறார். இவரின் “களஞ்சியம் இயக்கம்” தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா என 14 மாநிலங்களில் உள்ளது. வறுமை, கந்துவட்டி, வரதட்சணை, மது உள்ளிட்ட சமூக தீங்குகளுக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். தேசமே திரும்பி பார்த்த அந்நிகழ்வு 2001ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி நடந்தது. அன்றைய தினம் டெல்லியில் நடந்த விழாவில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், சின்னப் பிள்ளையின் கால்களை தொட்டு வணங்கினார்.