ஈரோட்டில் வெள்ளாடுகளைக் கடித்துக் கொன்ற சிறுத்தை - வெள்ளாடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை
ஈரோடு: சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது தோட்டம் சிக்கரசம்பாளையத்திலிருந்து பீக்கிரிபாளையம் செல்லும் சாலையில் உள்ளது. அங்கு இவர் வெள்ளாடுகள், பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு (பிப்ரவரி 25) அங்குள்ள ஆறு வெள்ளாடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST